OUR CLIENTS
வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை Posted on 07-Nov-2017 வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு   விடுமுறை

வேலூர், நவ.7-
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. அரக்கோணம், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய இடங்களில் மிதமான மழையும் மற்றஇடங்களில் சாரல் மழை பெய்தது.  நேற்று காலை அரக்கோணம், வாணியம்பாடி பகுதியில் மழை பெய்தது. வேலூரில் மேகம் மந்தமாக காணப்பட்டது. 

இதனால் கலெக்டர் ராமன் வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்தார். அதிகாலையில் பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். 

வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-  வேலூர்-7.5, ஆம்பூர்-19.6, ஆலங்காயம்-1.4, அரக்கோணம்-33.2, வாலாஜா-2.2, சோளிங்கர்-13.2, ஆற்காடு-3.2, குடியாத்தம்-21.8, மேல் ஆலத்தூர்-15.6.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் மழை காரணமாக கலெக்டர் கந்தசாமி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று ஒருநாள் விடுமுறை அறிவித்தார்

Label