OUR CLIENTS
புதிய மதுக்கடைகள் திறக்க உயர்நீதிமன்றம் தடை
புதிய மதுக்கடைகள் திறக்க உயர்நீதிமன்றம் தடை Posted on 07-Nov-2017 புதிய மதுக்கடைகள் திறக்க உயர்நீதிமன்றம்  தடை

சென்னை, நவ.7 -
உள்ளாட்சிப் பகுதி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழக நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட 1,700 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   விசாரணையின் இறுதியில், உள்ளாட்சிப் பகுதி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. தமிழக அரசு விளக்கம் அளிக்கும் வரை புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் வரும் 20-ஆம் தேதி வரை தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Label