OUR CLIENTS
கார்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுவிப்பு
கார்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுவிப்பு Posted on 07-Nov-2017 கார்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுவிப்பு

நெல்லை, நவ.7-
தமிழக அரசை கேலி செய்து சித்திரம் வரைந்து வெளியிட்டதற்காக கார்டூனிஸ்ட் பாலா ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். நேற்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரான பாலாவிற்கு ஜாமின் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்டூனிஸ்ட் பாலா, தமிழக அரசை கேலி செய்து சித்திரம் வரைந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.  நெல்லை மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் பாலாவின்மீது அளித்த புகாரின்பேரில் ஞாயிற்றுக்கிழமை தமிழக காவல்துறையினர், சென்னையை அடுத்த கோவூரில் பாலாவை கைது செய்து நெல்லைக்கு அழைத்துசென்றனர்.

நேற்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ராமதாஸ் முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்ட பாலா ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.  இந்நிலையில் பாலாவை கைது செய்ததற்காக தமிழக அரசுக்கு கேரள பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Label