OUR CLIENTS
இரட்டை இலை விவகாரம் : விசாரணையை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
இரட்டை இலை விவகாரம் : விசாரணையை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம் Posted on 07-Nov-2017 இரட்டை இலை விவகாரம் : விசாரணையை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி, நவ.7-
அ.தி.மு.க.வில் உள்ள இரு அணிகளில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணையை ஒத்திவைப்பதாக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் ஒரு அணியினரும், டி.டி.வி தினகரன் தலைமையில் ஒரு அணியினரும் செயல்பட்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை நாடினர்.

இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே, ஐந்து கட்டமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று ஆறாவது கட்டமாக விசாரணை நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் கார சார விவாதங்களை முன்வைத்துள்ளனர். நவம்பர் 10ஆம் தேதியன்று இரட்டை இலை வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த கெடு முடிய இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் அதற்கு முன்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பளிக்க இயலாத காரியம். எனவே உச்சநீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. எந்த அணிக்கு சாதமாக தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் மற்றொரு அணி நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த சூழ்நிலையில் இரட்டை இலைக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலையை மீட்டெடுப்பார்களா? இலை துளிர்க்குமா? முடங்குமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Label