OUR CLIENTS
ரிலையன்ஸ், ‘2ஜி’ சேவை நிறுத்தம் ‘டிராய்’ போடும் நிபந்தனைகள்
ரிலையன்ஸ், ‘2ஜி’ சேவை நிறுத்தம் ‘டிராய்’ போடும் நிபந்தனைகள் Posted on 07-Nov-2017 ரிலையன்ஸ், ‘2ஜி’ சேவை நிறுத்தம் ‘டிராய்’ போடும் நிபந்தனைகள்

புதுடெல்லி, நவ.7-
அனில் அம்­பானி தலை­மை­யி­லான, ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னம், 46 ஆயி­ரம் கோடி ரூபாய் கட­னில் சிக்­கி­யுள்­ளது. இதில், 25 ஆயி­ரம் கோடி ரூபாய் கடனை, இந்­தாண்டு இறு­திக்­குள் திரும்ப செலுத்­து­வ­தாக, இந்­நி­று­வ­னம், வங்­கி­க­ளுக்கு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஏர்­செல் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­தும் திட்­டத்தை கைவிட்­ட­தால், வங்­கி­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்ற முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, இழப்­பில் உள்ள, ‘2ஜி’ மொபைல் போன் சேவையை நிறுத்தி, லாபத்­தில் இயங்­கும், ‘4ஜி’ சேவையை மட்­டும் தொடர, ரிலை­யன்ஸ் கம்யூ., முடிவு செய்­துள்­ளது.இதை ஏற்­றுக் கொண்ட, தொலை தொடர்பு ஒழுங்­கு­முறை ஆணை­யம், அனைத்து மொபைல் போன் சேவை நிறு­வ­னங்­க­ளுக்­கும் அறிக்கை அனுப்பி உள்­ளது.அதன் விப­ரம்:ரிலை­யன்ஸ் கம்யூ., நிறு­வ­னம், ‘2ஜி’ சேவையை, டிச., 1 முதல் நிறுத்த உள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் சந்­தா­தா­ரர்­கள் விரும்­பி­னால், ‘4ஜி’ சேவையை தொட­ர­லாம். விரும்­பா­தோர், இந்­தாண்டு இறு­திக்­குள், வேறு நிறு­வ­னங்­களின் சேவைக்கு மாற­லாம். அத்­த­கைய சந்­தா­தா­ரர்­களின் விண்­ணப்­பத்தை, ரிலை­யன்ஸ் கம்யூ., நிரா­க­ரிக்­கக் கூடாது. அதே சம­யம், அவ்­வாறு மாற விரும்­பும் சந்­தா­தா­ரர்­களை, பிற நிறு­வ­னங்­கள், மறுக்­கா­மல் ஏற்­றுக் கொள்ள வேண்­டும்இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது. 

Label