OUR CLIENTS
உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது : மோகன் பகவத்
உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது : மோகன் பகவத் Posted on 07-Nov-2017 உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது : மோகன் பகவத்

ஜெய்பூர், நவ.7-
உலகமே இந்தியாவை உற்றுநோக்குகிறது. இந்தியாவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கூறினார்.

ஜெய்பூரில் சேவா பார்தி சமிதி கட்டடத்தை நேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,  இந்த உலகமே பல சோதனைகளால் சூழப்பட்டு உள்ளது. எனவே கிழக்கு நோக்கி... இந்தியாவையும் சீனாவையும் உலகம் உற்றுநோக்குகிறது. ஆனால் சீனா பற்றி பல சந்தேகங்கள் எழுகின்றன. எனவே நம்பிக்கையுடன் இந்தியாவையே இந்த உலகம் நம்பிக்கையுடன் பார்க்கிறது.  இந்தியா தான் வழிகாட்டவேண்டும் என்று உலகம் விரும்புகிறது. நமது நல்ல செயல்பாடுகளில் தான் உலகத்தலைவராக ஒரு நாடு உருவாக முடியும்.  மக்களுக்கும் நாட்டுக்கும் பணியாற்றுவது என்பது விளம்பரப்படுத்தக்கூடியது அல்ல. ஆர்.எஸ்.எஸ். மக்களுக்கு சேவை செய்கிறது. அதை செயலில் காட்ட முடியுமே தவிர பார்க்க முடியாது என்றார்.

Label