OUR CLIENTS
தமிழகத்தில் மீண்டும் மழை : வானிலை மையம் புதிய தகவல்
தமிழகத்தில் மீண்டும் மழை : வானிலை மையம் புதிய தகவல் Posted on 07-Nov-2017 தமிழகத்தில் மீண்டும் மழை :   வானிலை மையம் புதிய தகவல்

சென்னை, நவ.7-
கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது., குடியிருப்புகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து, கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆனால், நேற்று முன்தினம் பெரிதாக மழை இல்லை. பல இடங்களில் வெயில் அடித்தது.  

இந்நிலையில்,  நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:  வங்கக்கடலில் ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிலந்து விட்டது. ஆனால், இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.  குறிப்பாக தென் தமிழகம், டெல்டா, காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும். அதேபோல், வரும் சில நாட்களில் மழை படிப்படியாக குறையும் என அவர் தெரிவித்தார்.  மேலும், வடகிழக்கு பருவமழை வழக்கமான 23 செ.மீ. க்கு பதில் 1 செ. மீ. குறைந்து 22 செ.மீ வரை பெய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் மேல் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Label