OUR CLIENTS
ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு Posted on 08-Nov-2017 ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நவ.8
தி.மு.க. பிரமுகர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி திருச்சியில் மர்மமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார் எனத் தெரியாத நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காததால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று ராமஜெயத்தின் மனைவி லதா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி.யிடம் அறிக்கை கேட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர்  நடைபெற்ற விசாரணையின்போது, இந்த வழக்கில் பல்வேறு தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.  இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி 3 மாத அவகாசம் அளித்து, அதற்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று இறுதிக்கெடு விதித்தார். அதன்பின்னர் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, இவ்வழக்கில் 5 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் ஏற்படாததால்  சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

Label