OUR CLIENTS
பணமதிப்பிழப்பு கறுப்பு தினம் : மதுரையில் இன்று மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்
பணமதிப்பிழப்பு கறுப்பு தினம் : மதுரையில் இன்று மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் Posted on 08-Nov-2017 பணமதிப்பிழப்பு கறுப்பு தினம்  : மதுரையில் இன்று  மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ.8-
பணமதிப்பிழப்பு தினத்தை கறுப்பு தினமாக அனுசரித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து இன்று  (8-ந்தேதி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மதுரையில் மமு.க.ஸ்டாலின் பங்கேற்பு.

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து இன்று  (8-ந்தேதி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கழக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கறுப்புச் சட்டை அணிந்து கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பணமதிப்பிழப்பு தினம் - ‘‘கறுப்பு தினமாக’’ அனுசரித்து நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகிப்போர் விவரம் வருமாறு:-  

மதுரை - கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருச்சி - முதன்மைச் செயலாளர் துரைமுருகன்.
திண்டுக்கல் - துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி.
நாமக்கல் - துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி.
திருப்பூர் - துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
திருநெல்வேலி - அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
தஞ்சாவூர் - டி.ஆர்.பாலு.
சேலம் - திருச்சி சிவா, எம்பி.

மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும்.  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிக பெருமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘‘கறுப்பு பேட்ஜ்’’ அணிந்து பெருமளவில் கலந்து கொள்ளச் செய்து, போராட்டத்தை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label