OUR CLIENTS
போயஸ் கார்டனில் பாதுகாப்பு குறைப்பு : உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்
போயஸ் கார்டனில் பாதுகாப்பு குறைப்பு : உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல் Posted on 08-Nov-2017 போயஸ் கார்டனில் பாதுகாப்பு குறைப்பு : உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்

சென்னை, நவ.8-
போயஸ் கார்டனில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.  

பொது இடங்களில் புகை பிடித்தல் தடை சட்டத்தை அமல்படுத்தக்கோரி கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோ 11 கடை உரிமையாளர் சரத் தொடர்ந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டத்தை அமல்படுத்தியது குறித்தும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது குறித்தும் காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

அந்த அறிக்கை கண் துடைப்புக்காக தாக்கல் செய்யப்பட்டதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி கிருபாகரன், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை தயாரிக்க காவல்துறையினருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றும், காவல்துறையினரை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.  

மேலும் போயஸ் கார்டனில் அளவுக்கு அதிகமாக காவல் துறையினர் குவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.   இந்த வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்த போது போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கபட்டுள்ளதாகவும், மொத்தம் இருந்த 50 காவலர்களில் தற்போது 15 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பதாக காவல்துறை பதில் அளித்தது. இதையடுத்து மீதமுள்ள 35 பேரை சட்டம் ஒழுங்கு பணிக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட நீதிபதி வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Label