OUR CLIENTS
இவங்களையெல்லாம் ஏன் ஜெ. பேச விடலை தெரியுமா? : விஜயகாந்த் கிண்டல் பேச்சு!
இவங்களையெல்லாம் ஏன் ஜெ. பேச விடலை தெரியுமா? : விஜயகாந்த் கிண்டல் பேச்சு! Posted on 08-Nov-2017 இவங்களையெல்லாம் ஏன் ஜெ. பேச விடலை தெரியுமா? : விஜயகாந்த் கிண்டல் பேச்சு!

சென்னை, நவ.8 -
தமிழக அரசு நிதி கேட்பது மக்களுக்கு உதவி செய்ய அல்ல, அரசியல்வாதிகளுக்கு நிதி ஒதுக்கிக் கொள்ளவே என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வெள்ள பாதிப்புகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று நேரில் பார்வையிட்டார். பள்ளிக்கரணை ஏரிப் பகுதிக்கு வந்த அவரை கட்சியின் நிர்வாகிகள் தோளில் கைபோட்டு அழைத்து வந்தனர். அவருடன் தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜகாந்தும் வந்திருந்தார். 

 ஏரி நீர் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மன்மோகன்சிங் என்று சொல்கிறார், அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு முதல்வர் யார் என்று சொல்கிறார் என்று தெரியும். இதனால் தான் ஜெயலலிதா இவர்களையெல்லாம் பேசவிடாமல் வைத்திருந்தார்.  பிரதமர் மோடி ஏற்கனவே சென்னை வந்த போது ஜெயலலிதா, சோவை சந்தித்துள்ளார். அரசியலாக்கத் தேவையில்லை. மழை, வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்கவில்லை, அவர்களுக்குத் தான் நிதி ஒதுக்கிக் கொள்ளத்தான் ரூ. 1500 கோடி கேட்கிறார்கள்.

 நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கட்டும் அதற்கு நான் வரவேற்பு தெரிவிக்கிறேன். அவர் கூட மேலும் 10 பேர் கட்சி தொடங்க வந்தால் அதையும் வரவேற்பேன். அவர் முதலில் கட்சியை தொடங்கி மக்களின் அபிமானத்தை பெறட்டும் அதன் பிறகு கூட்டணி வைப்பதை பற்றி பேசலாம் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.

Label