OUR CLIENTS
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாள் , இந்திய பொருளாதாரத்தில் இன்று கறுப்பு தினம் : மன்மோகன் சிங் ஆவேசம்
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாள் , இந்திய பொருளாதாரத்தில் இன்று கறுப்பு தினம் : மன்மோகன் சிங் ஆவேசம் Posted on 08-Nov-2017 ரூ.500, 1000  நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாள் , இந்திய பொருளாதாரத்தில்  இன்று  கறுப்பு தினம்  : மன்மோகன் சிங் ஆவேசம்

ஆமதாபாத், நவ.8-
உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களான ரூபாய் 500, 1000 செல்லாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 2016 நவம்பர் 8ம் தேதி இந்திய பொருளாதார வரலாற்றில் கறுப்பு தினமாகும் என இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூறினார்.

ஆமதாபாத் நகரில் வியாபாரிகள் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.  ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடி அறிவித்ததை பற்றி குறிப்பிட்டார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து நவம்பர் 8ம் தேதியோடு சரியாக ஒரு வருடம் ஆகிறது.  2017ம் ஆண்டு ஜூலை முதல் தேதியன்று இரவு இந்தியப் பிரதமர் நாடாளுமன்ற மையத்தில் ஜிஎஸ்டி வரியை அமல் செய்வதை துவக்கி வைத்தார். இந்த இரண்டு திட்டங்களும் மோசமாகத் தயாரிக்கப்பட்டவை. அவசரம் அவசரமாக அமல் செய்யப்பட்டவை. 

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தது குறித்து மாநிலங்களவையில் நான் பேசினேன். அப்பொழுது ரூபாய் நோட்டுகளை ரத்துச் செய்தது திட்டமிடப்பட்ட கொள்ளை, சட்டபடியாக நடக்கும் வழிப்பறி என்று நான் குறிப்பிட்டேன். அந்தக் கருத்தையே மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த அறிவிப்பு வெளியான நவம்பர் 8ம் தேதி இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு துக்க தினமாகும். இந்திய ஜனநாயகத்துக்கும் துக்க தினமாகும்.  மக்களுக்கு நிர்பந்தமாக  அமையும் இதுபோன்ற நடவடிக்கை உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் எடுக்கப்படவில்லை.

மோடியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களினால் பயனடைந்தது சீன அரசுதான். சீனாவின் ஏற்றுமதிகள் 2017ம் ஆண்டு அதிகரிக்க காரணமாக அமைந்தன.
சூரத், வாபி, மோர்பி மற்றும் பிற குஜராத் நகரங்கள் ரூபாய் நோட்டு ரத்துச் செய்யட்பட்டதாலும் ஜிஎஸ்டி சட்டத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த இரண்டு நடவடிக்கைகளும் சிறுதொழில் நிறுவனங்களின் முதுகெலும்பை முறித்துவிட்டன. இந்த இரண்டு நடவடிக்கைகளும் பொருளாதார பயங்கரவாத நடவடிக்கை என குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்திய வர்த்தகர்கள் கருதுகின்றனர்.  அதனால்தான் நவம்பர் 8ம் தேதி கறுப்பு தினமாக காங்கிரசும் மற்ற எதிர்க்கட்சிகளும் அறிவித்துள்ளன. 

காங்கிரஸ் மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபொழுது ஒரு ஜிஎஸ்டி திட்டத்தை யோசித்து யோசித்து சிறப்பாகத் தயாரித்தன. அப்பொழுது அந்த திட்டம் வரவிடாமல் தடுத்து முட்டுக்கட்டை போட்டவர் இந்த மோடி தான்.  காங்கிரஸ் திட்டத்தை மாற்றி ஜிஎஸ்டியை இப்பொழுது குழப்பி  சிக்கலாக்கிவிட்டார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட ஜிஎஸ்டி வரிகள் அறிவித்துவிட்டார்கள். அதுவும் போதாது என்று கூடுதல் செஸ் வசூல் செய்யப்படுகிறது.  பிரதமர் மோடியின் .செயல் திட்டம் புல்லட் ரயில் திட்டமாகும். இது ஒரு ஆடம்பரத் திட்டம். அகல ரயில் பாதையை அங்கு நிறுவி மாற்று ரயில்களை விடலாம். புல்லட் ரயில் வேணுமா என்றால் அது வளர்ச்சியை எதிர்ப்பதாகிவிடுமா? ஜிஎஸ்டியையும், ரூபாய் நோட்டுகளை ரத்துச் செய்யும் திட்டத்தையும் எதிர்த்தால் அவர் வரி ஏய்ப்பவர் ஆகிவிடுவாரா?.  குஜராத் வனங்களில் உள்ள நிலங்களை எல்லாம் தொழிற்சாலைகளுக்கு விற்றுவிட்டார்கள். அதனால் பழங்குடியினர் விவசாயத்துக்கு நிலம் இல்லாமல் தவிக்கிறார்கள்.
இவ்வாறு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

Label