OUR CLIENTS
அயோத்தி பிரச்சனைக்கு சமரசத் திட்டம் : ஷியா வஃபு வாரியம் அறிவிப்பு
அயோத்தி பிரச்சனைக்கு சமரசத் திட்டம் : ஷியா வஃபு வாரியம் அறிவிப்பு Posted on 08-Nov-2017 அயோத்தி பிரச்சனைக்கு சமரசத் திட்டம்  : ஷியா வஃபு வாரியம் அறிவிப்பு

லக்னோ, நவ.8-
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மத்திய ஷியா வக்பு வாரியம், வரும் டிசம்பர் 6ம் தேதி வாக்கில் அயோத்தியா பிரச்சினக்கு சுமூக தீர்வு காண திட்டம்  ஒன்றை தயார் செய்து வெளியிடும் என அறிவித்துள்ளது.

அயோத்தியாவில் 1992ம் வருடம் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. சர்ச்சைகுரிய அந்த இடத்திற்கு பல இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கின் ஒரு மனுதாரரான மத்திய ஷியா வக்பு வாரியம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதி அன்று  அயோத்தியா விவகாரத்திற்கான சுமூக தீர்வுகள் அடங்கிய வரைவு திட்டம் தயாரித்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இது குறித்து ஷியா வஃபு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிச்வி கூறுகையில் ‘‘இந்த மாதம் அயோத்தியா சென்று அங்குள்ள சாதுக்கள் மற்றும் தலைமைப் பூசாரிகளை சந்தித்து பேசவுள்ளேன். அவர்களில் பலருடன் முன்பே அயோத்தியா விவகாரம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆலோசனை நடத்தினேன். அதன் மூலம் இந்த விவகாரத்தை இருதரப்பிற்கும் சாதகமான வழியில் சுமூகமாக தீர்க்க தீர்வு ஒன்றை தயாரித்து வருகிறோம்’’ ‘‘இந்த திட்டத்தை வரும் டிசம்பர் 6ம் தேதிக்குள் தயாரித்து விடுவோம் என நம்புகிறேன்’’ என்று வாசிம் கூறினார். 

ஷியா வஃபு வாரியம் அயோத்தியாவின் சர்ச்சைகுரிய அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் ஆர்ட் ஆஃப் லிவ்விங் அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து பேசிய வாசிம் ரிச்வி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தன் ஆதரவைத் தெரிவித்தார்.  ஆனால் ராமர் கோவில் கட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சன்னி இஸ்லாமிய வாரியம், அயோத்தியாவின் சர்ச்சைகுரிய நிலத்தில் ஷியா வக்பு வாரியத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறி வருகிறது.

Label