OUR CLIENTS
கருணாநிதியிடம் நலம் விசாரிப்பு : பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி நன்றி
கருணாநிதியிடம் நலம் விசாரிப்பு : பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி நன்றி Posted on 08-Nov-2017 கருணாநிதியிடம் நலம் விசாரிப்பு : பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி நன்றி

மதுரை, நவ.8-
கருணாநிதியை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்ததற்காக கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி பவள விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அதன் பின் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். அவரிடமும், அவரது மனைவி தயாளு அம்மாளிடமும் மோடி நலம் விசாரித்தார். மேலும் ஓய்வெடுக்க தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.  கருணாநிதியை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்ததற்காக கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-  என்னுடைய பெற்றோரை சந்தித்து நலம் விசாரித்ததற்காக தனிப்பட்ட முறையில் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்களுடைய அக்கறையான நலம் விசாரிப்பு என்னை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் உங்களை சந்திக்க முடியவில்லை. என்னுடைய பெற்றோரை ஓய்வெடுக்க டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவர்களுக்கு புத்துணர்வை தரும்.  நாட்டின்  முன்னேற்றத்திற்காக தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Label