OUR CLIENTS
அரசின் விதிமுறைகளை மீறி காப்பு காட்டுக்குள் சாலை! : நீலகிரியில் வனத்துறையினர் அமைதி காத்தது ஏன்?
அரசின் விதிமுறைகளை மீறி காப்பு காட்டுக்குள் சாலை! : நீலகிரியில் வனத்துறையினர் அமைதி காத்தது ஏன்? Posted on 08-Nov-2017 அரசின் விதிமுறைகளை மீறி காப்பு காட்டுக்குள் சாலை! : நீலகிரியில் வனத்துறையினர் அமைதி காத்தது ஏன்?

நீலகிரி, நவ.8-
நீலகிரி மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காட்டிற்குள் சிலர் சட்டத்திற்கு புறம்பாக சாலை அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசுக்கு சொந்தமான காப்புக் காட்டிற்குள் எவ்விதமான மேம்பாட்டு பணியும் மேற்கொள்ள கூடாது என்பது அரசின் விதிமுறையாகும். ஆனால் இவ்விதியை மீறி சிலர் உதகையை அடுத்துள்ள குந்தா பள்ளம் காப்பு காட்டில் சாலை அமைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள வனத்துறையினர் சாலை அமைத்தது யார் என்ற தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்குள்ள மலைச்சரிவில் உள்ள பென்ஸ்டாக் என்ற இடத்தில் உள்ள நாவல் மரங்களை சிலர் வெட்டி கடத்தியுள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது. 

இயற்கை சோலை மரங்களும் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. சமூக விரோதிகள் சாலை அமைக்கும் வரை வனத்துறையினரின் கண்களில் படாமல் தப்பித்தது எப்படி என சமூக ஆர்லவர்கள் வினவியுள்ளனர். சமூகவிரோதிகள் சாலை அமைக்கம் அளவிற்கு வனத்துறையினர் அலட்சியமாக இருந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். 

Label