OUR CLIENTS
29ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் திறக்க இருந்த ரயில்வே மேம்பாலம் விரிசல் தார் ஊற்றி மறைத்தால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
29ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் திறக்க இருந்த ரயில்வே மேம்பாலம் விரிசல் தார் ஊற்றி மறைத்தால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் Posted on 08-Nov-2017 29ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்  முதல்வர் திறக்க இருந்த  ரயில்வே மேம்பாலம் விரிசல்  தார் ஊற்றி மறைத்தால்  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, நவ.8 -
வண்டிக்காரத்தெருவில் இருந்து மேரீஸ்கார்னர் வரை 870 மீட்டர் நீளம் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் வரும் 29ம் தேதி தஞ்சையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், திறக்கப்பட இருந்தது.   இந்நிலையில் முதல்வர் திறக்க இருந்த ரயில்வே மேம்பாலம் விரிசல் விட்டது. இதனை தார் ஊற்றி மறைத்தனர். 

தஞ்சை சாந்தபிள்ளை கேட் அருகே தஞ்சை - நாகை சாலையின் குறுக்கே ரயில்வே கிராசிங் உள்ளது. கேட் மூடும்போது இருபுறமும் நூற்றுகணக்கான வாகனங்கள் நிற்கும். ஒவ்வொரு முறையில் 30 நிமிடம்அந்த கேட்டில் நின்று வாகனங்கள் சென்று வந்தன. அந்த இடத்தில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2013ல் வேலைகள் துவங்கியது. நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு முதல்வர் நிதி ஒதுக்கீட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டது. 
வண்டிக்காரத்தெருவில் இருந்து மேரீஸ்கார்னர் வரை 870 மீட்டர் நீளம் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் வரும் 29ம் தேதி தஞ்சையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், திறக்கப்பட இருந்தது.   

வண்டிக்காரத்தெரு அருகே புதிதாக கட்டிய பாலத்தின் நடுவில் நேற்று திடீர் விரிசல் ஏற்பட்டது. பாலத்தின் நடுவில் போடப்பட்டுள்ள தார்ச்சாலையில் நீண்ட தூரத்துக்கு இரண்டாக பிளவு ஏற்பட்டது. மேலும் பாலத்தின் பக்கவாட்டு சுவரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலம் திறக்கப்படுவதற்கு முன் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு நெடுஞ்சாலை துறையை சேர்ந்த 5 பேர் அங்கு வந்து விரிசல் ஏற்பட்டிருந்த இடத்தை தார் ஊற்றி அதில் கிராவல் மண்ணை போட்டு மூடினர். நெடுஞ்சாலைத்துறையின் இந்த தற்காலிக ஏற்பாடு குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் பாலத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த பாலத்தை 29ம் தேதி திறக்க தடை விதிக்க வேண்டும். பாலம் விரிசலுக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Label