OUR CLIENTS
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் பாக்கி : ராமதாஸ் கடும் கண்டனம்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் பாக்கி : ராமதாஸ் கடும் கண்டனம் Posted on 09-Nov-2017 தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் பாக்கி  : ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை, நவ.9
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், உழைப்பவனின் வியர்வை காயும் முன் ஊதியம் வழங்குவது தான் அறம் ஆகும். ஆனால், தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஏழை மக்களுக்கு ஊதியம் வழங்கும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கதாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 100 நாட்கள் வேலை வழங்கப்படும்.

 தமிழ்நாட்டில் இவ்வாறு வழங்கப்பட்ட வேலைக்கான ஊதியத்தை செப்டம்பர் 11-ம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு வழங்கவில்லை. தமிழ்நாட்டில் 69.21 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 86.77 லட்சம் பேர் இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு கடந்த 10 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3000 முதல் ரூ.7000 வரை ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பயனாளிகளுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதற்கு வசதியாகவும், ஊதியம் வழங்குவதில் முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஊதியம் செலுத்தப்படுகிறது.

ஆனால், பயனாளிகளின் ஊதியக் கணக்குகளை மத்திய அரசுக்கு அனுப்பி, அதற்கான நிதியை பெறுவதில் தான் ஏற்பட்ட குளறுபடிகள்தான் இந்த தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பயனாளிகளின் ஊதியத்திற்கான விவரங்களைத் தயாரித்து அதற்கான நிதி மாற்ற ஆணை தயாரிக்கப்பட்டு பொது நிதி மேலாண்மை அமைப்புக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அவ்வாறு அனுப்பப்பட்டால் ஊதியம் உடனடியாக வழங்கப்பட்டு விடும் என்றும் மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை வேலை வழங்காமல் இருக்க முடியாது. அதுமட்டுமின்றி அனைத்துக் குடும்பங்களுக்கும் சராசரியாக 50 சதவீத வேலை கூட இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, பயனாளிகளுக்கு போதுமான வேலை வழங்க வசதியாக இத்திட்டத்திற்கு ரூ.10,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Label