OUR CLIENTS
நீதிபதி பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக சிபிஐ புகார் பதிவு : உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க ஒப்புதல்
நீதிபதி பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக சிபிஐ புகார் பதிவு : உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க ஒப்புதல் Posted on 10-Nov-2017 நீதிபதி பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக சிபிஐ புகார் பதிவு : உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க ஒப்புதல்

புதுடெல்லி, நவ.10-
நீதிபதிகள் பெயரிலேயே லஞ்சம் வழங்கப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

நேற்று  உச்ச நீதிமன்றம் கூடியதும் நீதிபதிகள் ஜே.சேலமேஸ்வர், எஸ்.அப்துல் நஜீர் அடங்கிய அமர்வு முன் சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் மற்றும் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆகிய இருவரும் ஆஜராகி ஆகி தகவல் ஒன்றைச் சமர்ப்பித்தனர். நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக முதல் தகவல் அறிக்கை ஒன்றை சிபிஐ பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் பெரிதும் கவலை ஏற்படுத்துவதாக உள்ளது. நீதிபதிகள் மீதான புகார்கள் குறித்து நீதிபதிகள் எப்படி விசாரிக்க முடியும் என்று தவே குறிப்பிட்டார். இந்தப் பிரச்னை பற்றிய விவாதத்தை மதியம் 12.45க்கு எடுத்துக் கொள்ளும்படியும் தவே கேட்டுக் கொண்டார்.   அவரது கோரிக்கையை ஏற்று அந்தப் பிரச்னை குறித்து 12.45க்கு பரிசீலிக்கலாம் என நீதிபதிகள் சேலமேஸ்வர் மற்றும் அப்துல் நஜீர் ஆகிய இருவரும் ஆணை பிறப்பித்தனர்.  நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும். அந்த அமர்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட குழு விசாரிக்கும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.  இந்தப் புகார் குறித்து சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.  சிபிஐ பதிவு செய்துள்ள  முதல் தகவல் அறிக்கை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சீலிட்ட கவரில் வைத்து அரசியல் சட்ட அமர்வு முன் வரும் நவம்பர் 13ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என சிபிஐ நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.

இந்த குற்றச்சாட்டில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார் என சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.   இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் பார் அசோஷியேஷனும், மூத்த வழக்கறிஞர் தவேயும் கேட்டுக் கொண்டனர். ஏனெனில் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விசாரித்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

Label