OUR CLIENTS
இந்தியாவில் நோயாளியின் சராசரி மருத்துவ ஆலோசனை நேரம் 2 நிமிடங்கள் :பி.எம்.ஜே. வெளியிட்ட ஆய்வில் தகவல்
இந்தியாவில் நோயாளியின் சராசரி மருத்துவ ஆலோசனை நேரம் 2 நிமிடங்கள் :பி.எம்.ஜே. வெளியிட்ட ஆய்வில் தகவல் Posted on 10-Nov-2017 இந்தியாவில் நோயாளியின் சராசரி மருத்துவ ஆலோசனை நேரம் 2 நிமிடங்கள்  :பி.எம்.ஜே. வெளியிட்ட ஆய்வில் தகவல்

லண்டன், நவ.10
பிரிட்டிஷ் நாளிதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தியாவில் மருத்துவர்கள் ஒரு நோயாளிக்கு சராசரியாக 2 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் மருத்துவ நாளிதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலகின் 15 நாடுகளில் உள்ள மருத்துவர்கள் ஒரு நோயாளிக்கு சராசரியாக 5 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தையே செலவிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பாக இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் நோயாளிளுக்கு மருத்துவ ஆலோசனை கொடுப்பதற்கு குறைவான நேரத்தை செலவிடுகின்றனர். குறைவான நேரத்திற்கு கொடுக்கப்படும் மருத்துவ ஆலோசனை நோயாளிகளுக்கு சரியான சிகிச்சையை அளிப்பதில்லை. நோயாளிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதால் அவர்களின் அனைத்து பிரச்சனைகளும் கேட்டு அறியப்படுகின்றன.  மேலும், அவர் குறைகளை கூறுவதற்கான நேரம் கிடைக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் சாராசரி மருத்துவ ஆலோசனை நேரம் 20 நிமிடத்திற்கு அதிகமாகும்  மற்றும் லண்டனில் 10 நிமிடங்கள் ஆகும். பங்களாதேஷ் மற்றும் ஸ்வீடனில் 48 நொடிகள் மற்றும் 22.5 நிமிடங்கள் ஆகும்.  

Label