OUR CLIENTS
வருமான வரி துறை சோதனையை அரசியலாக்க கூடாது : பொன்.ராதாகிருஷ்ணன்
வருமான வரி துறை சோதனையை அரசியலாக்க கூடாது : பொன்.ராதாகிருஷ்ணன் Posted on 13-Nov-2017 வருமான வரி துறை சோதனையை அரசியலாக்க கூடாது : பொன்.ராதாகிருஷ்ணன்

திருச்சி, நவ.13
சுய அதிகாரம் படைத்த வருமான வரித்துறையின் சோதனையை அரசியலாக்கக் கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது:  உணவு விடுதிகளுக்கான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டு உள்ளது. உணவு பொருட்கள், ஹோட்டல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.  முன்பு இருந்ததை விட ஜி.எஸ்.டி. மிக குறைவு. இன்னும் சில மாதங்களில் ஜி.எஸ்.டி.யின் தேவையை வணிகர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும்  பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வருமான வரி சோதனை பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சுய அதிகாரம் படைத்த வருமான வரி துறையினரின் சோதனையை அரசியலாக்க கூடாது. மற்ற மாநிலங்களிலும் வருமான வரித்துறையின் சோதனை நடந்திருக்கின்றன என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்ததில் திமுக கூட்டணியில் உள்ள சில ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  பாஜகவிடம் திமுக எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் இவ்வாறு நேற்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Label