OUR CLIENTS
கோபாலபுரத்துக்கு சென்ற நல்லக்கண்ணு, முத்தரசன் வரவேற்று புன்னகைத்த கருணாநிதி
கோபாலபுரத்துக்கு சென்ற நல்லக்கண்ணு, முத்தரசன் வரவேற்று புன்னகைத்த கருணாநிதி Posted on 13-Nov-2017 கோபாலபுரத்துக்கு சென்ற நல்லக்கண்ணு, முத்தரசன்  வரவேற்று புன்னகைத்த கருணாநிதி

சென்னை, நவ.13-
 கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவும், கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். 

கடந்த ஆண்டு முதல் உடல்நலம் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அரசியல் நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலினுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. உடல்நிலையை கருத்தில் கொண்டு முரசொலி பவள விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அவரது உடல்நலம் தேறி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முரசொலி அலுவலகத்திற்கு சென்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவும், கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் கோபாலபுரத்திற்கு சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் வெளியே வந்த நல்லக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.

நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தார் என்று அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

Label