OUR CLIENTS
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் கைது
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் கைது Posted on 13-Nov-2017 ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் கைது

திருவனந்தபுரம், நவ.13
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 5 கேரள வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கேரள மாநிலம் கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சிரியாவுக்கு சென்று அங்கு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர்.  இதுபற்றி மாநில அரசு விசாரணை நடத்தி அந்த தகவலை மத்திய புலனாய்வு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்களும் இது தொடர்பாக விசாரணை நடத்தி கிடைத்த ஆதாரங்கள் மூலம் இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.

இதன்பிறகு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களை மாநில அரசும், மத்திய புலனாய்வு போலீசாரும் வேட்டையாடி வருகிறார்கள்.  இதற்கிடையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்த கேரளாவை சேர்ந்த பலர் அங்கு நடக்கும் தீவிரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே நடக்கும் போரில் ஈடுபட்டு பலியாகும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.  சமீபத்தில் கண்ணூர் பகுதியை சேர்ந்த ‌ஷஜின் என்ற வாலிபர் சிரியாவில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தார். இதுபற்றிய தகவலை அவரது மனைவி ஹப்பினா சிரியாவில் இருந்து வாட்ஸ்-அப் ஆடியோ மூலம் கண்ணூரில் உள்ள ‌ஷஜினின் உறவினர்களுக்கு அனுப்பி இருந்தார். அதை மத்திய புலனாய்வு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த 5 பேர் துருக்கி வழியாக செல்ல முயன்றபோது அந்த நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்திவிட்டனர். இதை தொடர்ந்து அந்த 5 பேரும் கண்ணூருக்கு வந்தனர். அவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து கைது செய்தனர். அப்போது அவர்களில் 2 பேர் ஏற்கனவே பலமுறை சிரியா சென்றதும் அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றதும் தெரியவந்தது. அவர்களது பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.  இவர்களை போல மேலும் பலர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் தகவல் மத்திய புலனாய்வு போலீசாருக்கு கிடைத்துள்ளது. அவர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Label