OUR CLIENTS
ம.பி. சித்ரகூட் இடைத்தேர்தலில் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி
ம.பி. சித்ரகூட் இடைத்தேர்தலில் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி Posted on 13-Nov-2017 ம.பி. சித்ரகூட் இடைத்தேர்தலில் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி

போபால், நவ.13
மத்திய பிரதேசம் மாநிலம் சிதரகூட் சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 14000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 மத்திய பிரதேசம் மாநிலம் சித்ரகூட் சட்டப்பேரவை தொகுதி எம் எல் ஏவாக இருந்தவர் காங்கிரசை சேர்ந்த பிரேம்சிங். இவரது இறப்பை தொடர்ந்து அங்கு நவம்பர் 9-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை நடந்த இடைத்தேர்தலில் மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் தரப்பில் நிலான்ஷு சதுர்வேதி மற்றும் பா.ஜ.க. சார்பில் சங்கர்லால் திரிபாதி உள்ளிட்ட 12 கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனாலும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே தான் போட்டி பலமாக காணப்பட்டது.

இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி சட்னா மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சதுர்வேதி பா.ஜ.க. வேட்பாளர் திரிவேதியை விட முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் பா.ஜ.க. வேட்பாளரை விட 14,100 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் சதுர்வேதி வெற்றி பெற்றுள்ளார்.  மத்திய பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் வேளையில் சிதரகூட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Label