OUR CLIENTS
வருமானவரி சோதனை :ஜெயலலிதா உயிலை வெளிப்படையாக சொல்லிவிட்டே எடுக்கலாம்! - திருமாவளவன்
வருமானவரி சோதனை :ஜெயலலிதா உயிலை வெளிப்படையாக சொல்லிவிட்டே எடுக்கலாம்! - திருமாவளவன் Posted on 13-Nov-2017 வருமானவரி சோதனை  :ஜெயலலிதா உயிலை வெளிப்படையாக சொல்லிவிட்டே எடுக்கலாம்!  - திருமாவளவன்

கும்மிடிப்பூண்டி, நவ.13
சசிகலா, தினகரன் வீடுகளில் நடைபெறும் வருமானவரி சோதனை உள்நோக்கம் கொண்டது. ஜெயலலிதா உயிலை வெளிப்படையாக சொல்லிவிட்டே எடுக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார்.  முன்னதாக தமிழக எல்லையான ஆரம்பாக்கம் அருகே உள்ள பீமார்பாளையத்தில் கட்சியின் கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  சசிகலா, தினகரன் வீடுகளில் நடைபெறும் வருமானவரி சோதனை உள்நோக்கம் கொண்டது.ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால் அதை யாராலும் மறைத்து விட முடியாது. உயிலை எடுக்க வேண்டும் என்றால் அரசு வெளிப்படையாக சொல்லிவிட்டே எடுக்கலாம்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிற்கு மோடி நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.  தற்போது சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைத்திருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. மேலும் பல பொருட்களின் ஜி.எஸ்.டி.யை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.  மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது சந்திக்காத மோடி, கருணாநிதியை சந்தித்தது குறித்து ஏற்கனவே ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து நான் கருத்து கூற முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

Label