OUR CLIENTS
டெல்லியில் காற்று மாசு காரணமாக நோயாளிகளாக மாறும் மக்கள்
டெல்லியில் காற்று மாசு காரணமாக நோயாளிகளாக மாறும் மக்கள் Posted on 13-Nov-2017 டெல்லியில் காற்று மாசு காரணமாக நோயாளிகளாக மாறும் மக்கள்

புதுடெல்லி, நவ.13
டெல்லியில் நிலவும் தீவிர காற்று மாசு காரணமாக மக்களிடையே சுவாசப் பிரச்சனை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் காற்று மாசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். வல்லபாய் படேல் அரசு மருத்துவமனையில் உள்ள சுவாசக் கோளாறுகளுக்கான சிகிச்சைப் பிரிவில் இந்த வாரம் மட்டும் 300 நோயாளிகள் வரை அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்கள் அனைவரும் இருமல், நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக அங்கு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக யுனைடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Label