OUR CLIENTS
உள்நாட்டு விமானப் போக்குவரத்து பட்டியலில் இந்தியா 3வது இடம்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து பட்டியலில் இந்தியா 3வது இடம் Posted on 13-Nov-2017 உள்நாட்டு விமானப் போக்குவரத்து பட்டியலில்  இந்தியா  3வது  இடம்

புதுடெல்லி, நவ.13
அதிக அளவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை கையாளும் நாடுகளில் உலகளவில் மூன்றாம் இடம் வகிக்கும் இந்தியா, 2030-ஆம் ஆண்டுக்குள் மேலும் 55 விமான நிலையங்களை கட்டமைக்காவிட்டால், பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை, 6 கோடியே 10 லட்சத்திலிருந்து 10 கோடியே 30 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி ஆகிய விமான நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.  சிறிய விமான நிலையங்களான திருச்சி, அகர்தலா, டேராடூன், ஜெய்பூர் உள்ளிட்டவற்றிலும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

சென்னை, திருச்சி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் மற்றும் விமானங்களுக்கான தற்போதுள்ள இடவசதி 2022ஆம் ஆண்டு வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும், அதன்பின் விரிவுபடுத்துதல் மற்றும் புதிதாக 55 விமான நிலையங்கள் கட்டமைக்க வேண்டிவரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Label