OUR CLIENTS
பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையில் பேச வேண்டாம் : காங்கிரஸாருக்கு ராகுல் அறிவுரை
பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையில் பேச வேண்டாம் : காங்கிரஸாருக்கு ராகுல் அறிவுரை Posted on 13-Nov-2017 பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையில் பேச வேண்டாம்  : காங்கிரஸாருக்கு ராகுல் அறிவுரை

ஆமதாபாத், நவ.13
பிரதமர் அலுவலகம் பொய்கள் மூட்டை மூட்டையாக அவிழ்த்து விடுகிறது. அந்த புளுகு மூட்டைகளை உண்மைகளை மக்களுக்கு கூறுவதன் மூலம் அம்பலப்படுத்த வேண்டும். நாம் ஒருபோதும் பிரதமர் பதவிக்கு அவமரியாதை செய்யும் வகையில் பேசக்கூடாது என காங்கிரஸ் ஐடி பிரசார ஊழியர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்தார்.

குஜராத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, அப்போதைய பிரதமரை மரியாதை இல்லாமல் மோடி பேசியிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.  ஆனால், தாங்கள் அப்படி அல்ல என்றும், வரம்பு மீறி மரியாதை இல்லாமல் பேசிடமாட்டோம் என்றும் கூறிய ராகுல் காந்தி, இதுதான் தங்களுக்கும், பாஜகவினருக்கும் உள்ள வித்தியாசம் எனத் தெரிவித்தார்.  நாட்டின் பிரதமராகப் பதவி வகிப்பவருக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை தருவார்கள் என்றும் அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.

மேலும், தாம் டுவிட்டரில் இடும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் யாருடையது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,  அவை அனைத்தும் தமது கருத்தே என விளக்கமளித்தார்.  தமது கருத்தை மேம்படுத்த மூன்று முதல் 4 பேர் கொண்ட குழு இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

இந்தியாவில் தொலைத் தகவல் தொடர்பு புரட்சிக்கு வித்திட்டவராக கருதப்படுகிறவர் சாம் பித்ரோடா.  ராஜீவ்காந்தி அமைச்சரவையில் உறுப்பினராக பணியாற்றியவர். குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மக்கள் என்ன விரும்புகிறோர்கள் என நேரில் அறிவதற்காக தற்போது அவர் குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.  அவரது கருத்துகள் அடிப்படையில் விரைவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகும் என கூறப்படுகிறது.

Label