OUR CLIENTS
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் பெயரில் “பல்கலைக் கழகம்” என குறிப்பிடத் தடை : எஸ்.ஆர்.எம்., விஐடி உட்பட பெயரில் பல்கலைக்கழகம் நீக்கவேண்டும்
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் பெயரில் “பல்கலைக் கழகம்” என குறிப்பிடத் தடை : எஸ்.ஆர்.எம்., விஐடி உட்பட பெயரில் பல்கலைக்கழகம் நீக்கவேண்டும் Posted on 13-Nov-2017 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் பெயரில் “பல்கலைக் கழகம்” என குறிப்பிடத் தடை  : எஸ்.ஆர்.எம்.,   விஐடி உட்பட பெயரில் பல்கலைக்கழகம் நீக்கவேண்டும்

புதுடெல்லி, நவ.13
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், அவற்றின் பெயரில் பல்கலைக் கழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என பல்கலைக் கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி வழியாக கடந்த 2001 முதல் 2005 ஆம் ஆண்டு வரையில் அளிக்கப்பட்ட அனைத்து பி.டெக் பட்டங்களையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் அண்மையில், உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, பல்கலைக் கழகங்களுக்கு நிகரான கல்வி நிறுவனங்கள், தங்களை பல்கலைக் கழகங்கள் என்றே அழைத்துக் கொள்வதாக கூறி நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அத்தகைய கல்வி நிறுவனங்கள் பல்கலைக் கழகம் என தங்களை அழைத்துக் கொள்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு தடைவிதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அப்போது உத்தரவிட்டது.

அதன் படி பல்கலைக் கழக மானியக் குழு, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் என அழைக்கப்படும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், பல்கலைக் கழகம் என்ற சொல்லை அத்தகைய கல்வி நிலையங்கள் இனிப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால், கல்வி நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு அடைப்புக்குறிக்குள் பல்கலைக் கழகத்திற்கு நிகரானது என குறிப்பிடலாம் எனவும் பல்கலைக் கழக மானியக்குழுவின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் என்பதற்குப் பதிலாக வேறு பெயரைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என பல்கலைக் கழக மானியக்குழு செயலாளர் பி.கே. தாகூர்  தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், நாட்டில் உள்ள பல்வேறு பிரபலமான நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும், பல்கலைக் கழகம் என்ற சொல்லைத் தங்களது பெயரில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், ஹிந்துஸ்தான், சத்தியபாமா, எஸ்.ஆர்.எம்., வேல் டெக், விநாயகா மிஷன், செட்டிநாடு பல்கலைக் கழகம், பெரியார் மணியம்மை, விஐடி, காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளிட்டவை பெயரில் பல்கலைக்கழகம் என்பதை நீக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

Label