OUR CLIENTS
வங்கிகள் வாராக்கடனை தவிர்க்க கடன் வழங்குவதில் சீர்திருத்தம் : மத்திய அரசு முடிவு
வங்கிகள் வாராக்கடனை தவிர்க்க கடன் வழங்குவதில் சீர்திருத்தம் : மத்திய அரசு முடிவு Posted on 13-Nov-2017 வங்கிகள் வாராக்கடனை  தவிர்க்க  கடன் வழங்குவதில் சீர்திருத்தம் : மத்திய அரசு முடிவு

புதுடெல்லி, நவ.13
பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனில் சிக்கி தவிப்பதை தடுக்க, வங்கிகள் கடன் வழங்குவதில் உள்ள நெறிமுறைகளில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் பொதுத்துறை வங்கிகளின் லாபம் கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 38 சதவீதம் சரிவை கண்டுள்ளது. கடன் சுமையில் தவிக்கும் பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்கும் வகையில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார். இந்நிலையில், வாராக்கடன் சதவீதம் மேலும் உயராத வகையில் கடன் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மேலும், கடன் நெருக்கடியில் தவிக்கும் வங்கிகள், புதிய கடன் வழங்க அச்சப்படுவதால், அதனை போக்கும் வகையில், கடன் வழங்குவதில் சீர்த்திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து ஆலோசித்து வருகிறது.

Label