OUR CLIENTS
4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம் அட்டைகள் காலாவதியாகிவிடும்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்
4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம் அட்டைகள் காலாவதியாகிவிடும்: நிதி ஆயோக் அதிகாரி தகவல் Posted on 13-Nov-2017 4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம் அட்டைகள்   காலாவதியாகிவிடும்:  நிதி ஆயோக் அதிகாரி தகவல்

புதுடெல்லி, நவ.13
ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டைகள் போன்றவை அடுத்த நான்காண்டுகளில் புழக்கத்தில் இருக்காது என்று நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

மக்களின் மொபைல் தொலைபேசி மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும் என்று கூறியுள்ள அவர், வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலமே நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Label