OUR CLIENTS
இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு Posted on 13-Nov-2017 இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

 கோவை, நவ.13
கோவையில் வருகிற 18-ந் தேதி இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் வருகிற 18-ம் தேதி (சனிக்கிழமை) கோவை சிவானந்தா காலனியில் நடைபெறுகிறது.  இக்கூட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது-   மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் நடைபெற உள்ளது. 

கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்குகிறார்.  இதில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. செயல் தலைவர் மு.கஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு தா. பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், பார்வர்டு பிளாக் கதிரவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி என். ஆர். தனபாலன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஈ.வி.கே. எஸ். இளங்கோவன், தேசிய செயலாளர் ஜெயக்குமார், டாக்டர். செல்வகுமார், மாணிக் தாகூர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முகில்வாஷ்னிக், சசிதரூர், சென்னா ரெட்டி, அகில இந்திய எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் ராஜு, மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கிறார்கள்.   கோவையில் காங்கிரஸ் கட்சி பலம் பொருந்தியதாக உள்ளது என்பதை காண்பிக்கவே இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. தி.மு.க. -காங்கிரஸ் உறவு இணக்கமாக உள்ளது.   இவ்வாறு அவர் கூறினார்.

Label