OUR CLIENTS
பயிர் சேதங்களை கணக்கிட விரைவில் குழு அமைப்பு : அமைச்சர் உதயகுமார் உத்திவாரதம்
பயிர் சேதங்களை கணக்கிட விரைவில் குழு அமைப்பு : அமைச்சர் உதயகுமார் உத்திவாரதம் Posted on 14-Nov-2017 பயிர் சேதங்களை கணக்கிட விரைவில் குழு அமைப்பு : அமைச்சர் உதயகுமார் உத்திவாரதம்

சென்னை, நவ.14
மழை முடிந்தவுடன் பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்த குழுக்கள் அமைக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

சென்னை எழிலகத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-  ‘‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கி கடந்த 11-ம் தேதி வரை பெய்தது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.  வரும் காலங்களில் மிதமான, கனமழை, தொடர் மழை வெள்ளம் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார்நிலையில் இருக்கிறார்கள்.  மீண்டும் 5-நாட்களுக்கு மிதமான மழை சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் அவற்றை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பழைய கட்டிடங்கள், பாழடைந்த கட்டிடங்களில் உள்ள மக்களை பாது காப்பாக வெளியேற்றி வருகிறோம். நேற்று முன்தினம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.  மாநில பேரிடர் மேலாண்மை மையத்திற்கு சென்று பணிகளை கவனித்து வருகிறோம். நுங்கம் பாக்கத்தில் இரவு விழுந்த மரத்தை உடனே அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

பருவமழை தொடக்கத்தில் இப்படி இதுவரை பெய்தது இல்லை. தற்போது வரை 88 சதவீத மழை கிடைத்துள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யாத பகுதியும் உள்ளது.  சென்னையில் நீர்தேக்கம் பாதுகாப்பாக உள்ளது. அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மழை பாதிப்பு குறித்து 1070 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதிக்கு உடனடியாக அதிகாரிகள் குழு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.   பயிர் சேதம் பற்றி நிறைய புகார்கள் வருகின்றன. மழை முடிந்தவுடன் பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்த குழுக்கள் அமைக்கப்படும். அதன் பின்னர் நிவாரணம் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Label