OUR CLIENTS
ஓபிஎஸ் தலைமையிலான எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு : உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
ஓபிஎஸ் தலைமையிலான எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு : உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு Posted on 14-Nov-2017 ஓபிஎஸ் தலைமையிலான எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு : உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

 புதுடெல்லி, நவ.14
ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அப்போது அ.தி.மு.க.வில் தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.  இவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். 

இந்நிலையில் செம்மலை எம்.எல்.ஏ.  உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் சபாநாயகர் அதிகார வரம்பு குறித்து விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது. ஆந்திர சட்டபேரவை தொடர்பான இது போன்ற ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் வகையில் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து   உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி கேட்டுக் கொண்டதால் 13-ம் தேதி (நேற்று) விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.  உச்சநீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.  செம்மலை கோரிக்கையை உச்ச நீதிமன்றம்  நிராகரித்தது. இந்த வழக்கை விசாரிக்க மறுத்து விட்டது.

Label