OUR CLIENTS
10 ரயில் நிலையங்களை நவீனப்படுத்துதல் ரூ.5 ஆயிரம் கோடியில் திட்டம் ஒப்பந்தம் கையெழுத்து
10 ரயில் நிலையங்களை நவீனப்படுத்துதல் ரூ.5 ஆயிரம் கோடியில் திட்டம் ஒப்பந்தம் கையெழுத்து Posted on 14-Nov-2017 10 ரயில் நிலையங்களை நவீனப்படுத்துதல்  ரூ.5 ஆயிரம் கோடியில் திட்டம் ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி, நவ.14
அதிநவீன ரயில்நிலையங்களாக மாற்ற ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. இதில் அதிநவீனமாக மாறும் 10 ரயில்நிலையங்களில் புதுவையும் இடம் பெற்றுள்ளது.

நாட்டில் உள்ள 400 ரயில்நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 10 ரயில்நிலையங்களை முன்மாதிரி ரயில்நிலையங்களாக மாற்ற உள்ளனர்.

இந்த ரயில்நிலையங்களில் விமான நிலையத்தில் என்ன வசதிகள் இருக்கின்றனவோ அதேபோன்ற அனைத்து வசதிகளும் இடம் பெறும். இதற்காக 10 ரயில்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் புதுவை, டெல்லி சராய்ரோகில்லா, லக்னோ, கோமதி நகர், கோட்டா, திருப்பதி, நெல்லூர், எர்ணாகுளம், மட்கான், தானே ஆகிய ரயில்நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றை நவீன ரயில்நிலையங்களாக மாற்ற ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. இந்திய ரயில்வே துறை மத்திய அரசின் தேசிய கட்டுமான நிறுவனத்துடன் (என்.பி.சி.சி.) இணைந்து நவீன ரயில்நிலையங்களை உருவாக்குகிறது.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரயில்வே துறையின் ரயில் நிலவளர்ச்சி ஆணையம் மற்றும் தேசிய கட்டுமான நிறுவனம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.  இதன்படி வருகிற டிசம்பர் மாதம் இதற்கான பணிகள் தொடங்குகின்றன. 2020-ம் ஆண்டுக்குள் திட்டத்தை முடிக்க உள்ளனர். 10 ரயில்நிலையங்களையும் எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என்று ஏற்கனவே ஆய்வு நடத்தப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக பிளாட்பாரம், பயணிகள் தங்குமிடம், டிக்கெட் கவுண்டர், பார்க்கிங் இடங்கள் மற்றும் அடிப்படை வசதி உள்ள பகுதிகள் சீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து பயணிகள் வருவதற்கும், வெளியேறுவதற்கும் விமான நிலையத்தை போல தனித்தனியாக கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.  இதில் தனியார் பங்களிப்பும் சேர்க்கப்படுகிறது. ரயில்வே நிலத்தை 45 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடப்படும். அவர்கள் ஓட்டல், மால், மல்டிபிளக்ஸ் உள்ளிட்டவற்றை அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் குறிப்பிட்ட அளவிற்கு ரயில்வேக்கு வருமானம் கிடைக்கும்.

இந்த 10 ரயில்நிலையங்களும் சிறப்பாக அமைந்தால் அடுத்த கட்டங்களாக மற்ற ரயில்நிலையங்களும் இதேபோல நவீனப்படுத்தப்படும் என்று ரயில்வே துறை கூறியுள்ளது. 10 ரயில்நிலையங்களையும் நவீனப்படுத்த 2.5 ஆண்டுகள் கால நிர்ணயம் செய்திருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.

Label