OUR CLIENTS
ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் வழக்கு : மத்திய அரசு பிரமான பத்திரமாக தாக்கல் உச்சநீதிமன்றம் உத்தரவு
ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் வழக்கு : மத்திய அரசு பிரமான பத்திரமாக தாக்கல் உச்சநீதிமன்றம் உத்தரவு Posted on 14-Nov-2017 ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம்  வழக்கு  : மத்திய அரசு  பிரமான பத்திரமாக தாக்கல் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி, நவ.14
வங்காள வளைகுடா கடல் பகுதியில் உள்ள ராமர் பாலத்தை இடிக்காமல் “சேது சமுத்திர திட்ட”த்தை நிறைவேற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 6 வார காலத்திற்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமர் பாலத்தை இடிக்காமல் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்ககோரி பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சாமி மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக 6 வார காலங்களுக்குள் மத்திய அரசு தனது மனுவை பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Label