OUR CLIENTS
தமிழக ஊரகப்பகுதி நெஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி
தமிழக ஊரகப்பகுதி நெஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி Posted on 14-Nov-2017 தமிழக ஊரகப்பகுதி நெஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க  அனுமதி

புதுடெல்லி, நவ.14
தமிழகத்தின் ஊரகப்பகுதி நெஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி உத்தரவிட்டது. பின்னர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், தமது முந்தைய தீர்ப்பினில் சில திருத்தங்களை மேற்கொண்டது.

அதன்படி, 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளைப் பொருத்தவரை, அவற்றிலிருந்து 220 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதுமானது என 2017, மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மதுக்கடைகளை மூடுவதைத் தவிர்ப்பதற்காக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகள் என்ற பட்டியலின் கீழ் வகைப்படுத்தும் முயற்சியில் தமிழகம் மற்றும் பல மாநில அரசுகள் ஈடுபட்டன. இந்த முயற்சிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

தமிழக அரசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்பொழுது, தமிழகத்தின் ஊரகப்பகுதி நெஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க அரசுக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக்கி டாஸ்மாக் கடைகளைத் திறப்பது குறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கங்கள் திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் ஏற்கனவே மூடப்பட்ட மதுக்கடைகளைத் திறக்கலாம் என்றும் உச்சமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label