OUR CLIENTS
அமைச்சர்களை நீக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற தள்ளுபடி
அமைச்சர்களை நீக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற தள்ளுபடி Posted on 14-Nov-2017 அமைச்சர்களை நீக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற  தள்ளுபடி

சென்னை, நவ.14
தமிழகத்தில் அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், இதுபற்றி விசாரணை நடத்த தனி கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக தகவல்களை பொதுவெளியில் தெரிவித்த அமைச்சர்கள் கே.சி.வீரமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி மனோகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், அமைச்சர்கள், ரகசிய காப்பு பிரமாணம் எடுத்து விட்டு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை வெளியில் கூறியதாக புகார் கூறியிருந்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, ஆளுநரின் அதிகார எல்லையில் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார். அத்துடன், மனோகரன் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Label