OUR CLIENTS
கொடநாடு எஸ்டேட் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கும் அமைச்சர்கள்?
கொடநாடு எஸ்டேட் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கும் அமைச்சர்கள்? Posted on 14-Nov-2017 கொடநாடு எஸ்டேட் பழைய ரூபாய் நோட்டுகள்  மாற்றம் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கும் அமைச்சர்கள்?

கொடநாடு,  நவ.14
 பணமதிப்பு நீக்கத்திற்கு  பிறகு கொடநாடு எஸ்டேட்டில் இருந்த பல நூறு கோடி ரூபாய் பழைய நோட்டுகள், கூட்டுறவு வங்கிகள் மூலமாக மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமைச்சர்களிடமும் விசாரிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

 5-வது நாளாக கொடநாட்டில் உள்ள கிரீன் டீ எஸ்டேட்டில் நேற்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது. குறிப்பாக மேலாளர் நடராஜனிடம் இரவு, பகலாக வீ்ட்டிற்கு கூட அனுப்பாமல் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருந்தது.  அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் இருந்த கூட்டுறவு வங்கிகள் மூலமாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் கருப்பு பணத்தை, அதாவது வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட பழைய நோட்டுக்களை வெள்ளையாக மாற்றி அதனை கணக்கில் சேர்க்கும் பணியை செய்துள்ளார்கள்.

இந்த விவகாரம் மேலாளர் நடராஜனிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இங்கு இருக்க கூடிய எஸ்டேட் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.2 லட்சம் பணம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்க கூடிய கூட்டுறவு வங்கிகள் மூலமாக பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் எஸ்டேட் மேலாளர் நடராஜன் கூறியுள்ளார். எனவே அடுத்த கட்ட ஆய்வை வருமான வரித்துறையினர் மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாளர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த ஒருசில அமைச்சர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

Label