OUR CLIENTS
வாகன கட்டுப்பாடு திட்ட உத்தரவு மறுஆய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? - டெல்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி
வாகன கட்டுப்பாடு திட்ட உத்தரவு மறுஆய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? - டெல்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி Posted on 15-Nov-2017 வாகன கட்டுப்பாடு திட்ட உத்தரவு மறுஆய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? - டெல்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

புதுடெல்லி, நவ.15
டெல்லியில் வாகனக் கட்டுபாட்டு திட்டம் குறித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோராதது ஏன் என்று அம்மாநில அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் பனிமூட்டம் மற்றும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் நேற்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டிருந்தது. இதன்படி ஒற்றைப்படை தேதியில் ஒற்றப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களும் இரட்டைப்படை தேதியில் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களும் மட்டுமே சாலையில் அனுமதிக்கப்பட இருந்தது.

ஆனால், “இத்திட்டத்தில் விஐபிகளின் வாகனங்கள், அரசு அதிகாரிகள் அல்லது பெண்களின் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கக் கூடாது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்க வேண்டும்” என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது.
பெண்களின் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான விதிவிலக்கு நீக்கப்பட்டதை தொடர்ந்து வாகன கட்டுப்பாடு திட்டத்தை டெல்லி அரசு அதேநாளில் வாபஸ் பெற்றது. இது தொடர்பாக மாநில போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கலாட் கூறும்போது, பெண்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள டெல்லி அரசு தயாராக இல்லை. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாத்தை மீண்டும் அணுகுவோம்” என்றார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் கூறும்போது, “வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் எங்கள் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி டெல்லி அரசு இதுவரை எங்களை அணுகவில்லை. பிறகு எங்களை அணுகுவோம் என்று அமைச்சர் கூறியது ஊடக வெளிச்சம் பெறுவதற்காகவா?” என கடிந்துகொண்டார்.

இந்நிலையில் டெல்லியில் சற்று குறைந்திருந்த காற்று மாசுபாடு நேற்று மீண்டும் உயரத் தொடங்கியது. டெல்லியில் பெரும்பாலான பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. டெல்லியில் நேற்று முன்தியம் காலை 11 மணி நிலவரப்படி மாசு கண்காணிப்பு மையங்களில் அதிக மாசு அளவு பதிவாகியது. இது பாதுகாப்பான அளவை விட 10 மடங்கு அதிகமாகும்.

உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் இதற்கிடையே டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க, பஞ்சாப், ஹரியாணா, உ.பி. உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வயல்களில் அரிதாள் எரிப்பை கட்டுப்படுத்த வேண்டும். சூரிய மின்சக்தி திட்டம் மற்றும் பேட்டரி கார்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதில் அளிக்க, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று உத்தரவிட்டது.

Label