OUR CLIENTS
பாலாற்றில் மணல் கொள்ளை! : அரசு அதிகாரிகள் துணை?
பாலாற்றில் மணல் கொள்ளை! : அரசு அதிகாரிகள் துணை? Posted on 15-Nov-2017 பாலாற்றில் மணல் கொள்ளை! : அரசு அதிகாரிகள் துணை?

வேலூர், நவ.14
பள்ளிகொண்டா அடுத்த கழனிப்பாக்கம் பாலாற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு தினமும் பெங்களூருக்கு 30 லாரிகளில் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து தினமும் மாட்டுவண்டிகள், டிராக்டர், லாரி போன்ற வாகனங்களில் இரவும், பகலுமாக மணல் கடத்தல் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கூட  பாலாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து அரங்கேறியது. இவ்வாறு தொடர்ந்து மணல் கொள்ளையில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா அடுத்த கழனிபாக்கம் பகுதியில் பகல் நேரங்களில் பாலாற்றில் இருந்து சுரண்டப்படும் மணல், மாட்டுவண்டிகள் மூலமாக கொண்டு சென்று பதுக்கி வைக்கின்றனர். பின்னர் இரவு நேரங்களில் தினமும் சுமார் 30 லாரிகள் வரையில் பெங்களூருக்கு கடத்திச் சென்று விற்பனை செய்கின்றனர். இதில் 3 யூனிட் மணல் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.   மணல் கடத்தலில் ஏற்கனவே குண்டாசில் கைதாகி வெளியே வந்துள்ள இரண்டெழுத்து அடைமொழி கொண்டவர் ஈடுபடுவதாக அரசு அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். இதில் போலீசார் முதல் அப்பகுதியில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் சேரவேண்டியவை சரியாக சென்றடைவதால் மணல் கடத்தலில் தனிகாட்டு ராஜாவாக திகழ்ந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. 

பாலாற்றில் அன்மையில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும்,  சில தினங்களிலேயே பாலாறு வறண்டு காணப்படுகிறது. இதற்கு மணல் கடத்தல்தான் காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  எனவே மாவட்ட ஆட்சியர், கழனிப்பாக்கம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label