OUR CLIENTS
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் வழக்கு : கைதான சுகேசின் 8 சொகுசு கார்கள், பைக் பறிமுதல்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் வழக்கு : கைதான சுகேசின் 8 சொகுசு கார்கள், பைக் பறிமுதல் Posted on 16-Nov-2017 இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் வழக்கு : கைதான சுகேசின் 8 சொகுசு கார்கள், பைக் பறிமுதல்

பெங்களூர், நவ.16
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான 8 சொகுசு கார்கள் பறிமுதல் செய்து உள்ளனர்.
 
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.  சுகேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைதானார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

கார் தரகரான சுகேஷ் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சொகுசு கார்களை பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்து வந்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. விசாரணை கைதியான அவரை கடந்த மாதம் 9-ம் தேதி டெல்லி போலீசார் பெங்களூர் அழைத்து வந்தனர்.  அப்போது போலீசாரின் ஒத்துழைப்புடன் சுகேஷ் பெங்களூரில் சுதந்திரமாக சுற்றி திரிந்ததாக டெல்லி போலீஸ் கமி‌ஷனரிடம் வருமான வரித்துறை தெரிவித்தது. இது தொடர்பாக 7 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தனர்.  இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான 8 சொகுசு கார்கள் மற்றும் விளையாட்டு மோட்டார் பைக்கை வருமானவரி துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.

கடந்த 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை கொச்சியில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையின் புலனாய்வுப்பிரிவு நடத்திய சோதனையின் அடிப்படையில் அவரது உதவியாளரிடம் இருந்த இந்த சொகுசு கார்கள் மற்றும் அதிநவீன மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை வடடாரங்கள் தெரிவித்தன.  இது தொடர்பாக ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதுகுறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.

Label