OUR CLIENTS
தேர்தல் விளம்பரங்களில் ‘பப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது : பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் தடை
தேர்தல் விளம்பரங்களில் ‘பப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது : பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் தடை Posted on 16-Nov-2017 தேர்தல் விளம்பரங்களில் ‘பப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது   : பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் தடை

அகமதாபாத், நவ.16
குஜராத் பாஜகவினர் தேர்தலுக்கான மின்னணு விளம்பரங்களில் ராகுல்காந்தியை குறிப்பிடும் ‘பப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவிற்கும் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.  இந்நிலையில் பாஜவினர் தங்கள் மின்னணு விளம்பரங்களில் ‘பப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சமூக வலைதளங்களில்  ராகுல் காந்தியை ‘பப்பு’ என குறிப்பிடுவதுண்டு. இந்த வார்த்தையை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்துவது மிகவும் தரக்குறைவான விஷயமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

இது தொடர்பாக குஜராத் பாஜகவினர் அளித்த செய்தியின் விவரம்,  தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடும் முன்பு அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்தின் ஊடக கமிட்டி முன்பு சமர்ப்பிக்க வேண்டும். ஊடக கமிட்டியின் சான்றிதழ் கிடைத்த பின்பு தான் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடப்படும்.

இந்நிலையில் பாஜக அளித்த விளம்பரங்கள் கமிட்டி முன்பு சமர்ப்பிக்கப்பட்டன. அதில் பப்பு என்ற வார்த்தை இருப்பதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தியை குறிக்க பயனபடுத்தப்பட்டுள்ள இந்த வார்த்தையை விளம்பரங்களில் இருந்து உடனே நீக்கும்படியும் அதறகுப பதிலாக மாற்று வார்த்தையைப் பயன்படுத்தும்படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது என மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று அந்த வார்த்தை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.   இது குறித்து குஜராத் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக அதிகாரி பி.பி ஸ்வெய்னிடம் செய்தியாளர்கள் கேட்டப்போது   ‘‘இது குறித்த எந்த தகவலும் எனக்கு தெரியாது. எனவே முழுமையான விவரங்களை அறிந்த பின்தான் என்னால் கருத்து கூறமுடியும்’’ என தெரிவித்தார்.

Label