OUR CLIENTS
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Posted on 16-Nov-2017 பாலிவுட் நடிகர்  அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

புதுடெல்லி, நவ,16
இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட உள்ளது.

கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ) வாழ்நாள் சாதனையாளருக்கான விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.   இந்த சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (75) இவர் 190க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சிறந்த நடிகருக்கான நான்கு தேசிய விருதுகளையும் 15 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். சர்வதேச திரைப்பட விழா 1952 இல் தொடங்கப்படட்து. இது ஆசியாவில் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் ஒன்றாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
                           

Label