OUR CLIENTS
தேசிய விருது பெற்ற சிறுவன்-தொண்டு நிறுவன தலைவருக்கு முதல்வர் வாழ்த்து
தேசிய விருது பெற்ற சிறுவன்-தொண்டு நிறுவன தலைவருக்கு முதல்வர் வாழ்த்து Posted on 16-Nov-2017 தேசிய விருது பெற்ற சிறுவன்-தொண்டு நிறுவன தலைவருக்கு  முதல்வர் வாழ்த்து

சென்னை, நவ.16
புதிய கண்டுபிடிப்புக்காக தேசிய விருது பெற்ற சிறுவன் மற்றும் சமூக பணிகளுக்காக விருது பெற்ற தொண்டு நிறுவன தலைவர் ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தினமான  நவம்பர் 14ம் தேதி (நேற்று முன்தினம்) ஜனாதிபதி மாளிகையில் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகாஷ் மனோஜ் புதுமை கண்டுபிடிப்புக்காக  அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய விருது வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் மனோஜ் மாரடைப்பை முன்கூட்டியே அறியக்கூடிய வகையிலான கருவியை கண்டுபிடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற்ற சிறுவன் ஆகாஷ் மனோஜுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
அவர் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-   மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே அறியக் கூடிய சிறிய கருவியை புதியதாக கண்டுபிடித்த தங்களுக்கு, இந்திய குடியரசுத் தலைவரால் சிறந்த சாதனை புரிந்த குழந்தைக்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்த விருதினை பெற்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் வருங்காலங்களிலும் இதுபோன்று பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, மேலும் பல விருதுகளை பெற்று தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.  இவ்வாறு முதல்வர்  கூறியுள்ளார்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் Terre Des Homes Core Trust என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி  வரும் செழியனுக்கு குடியரசுத் தலைவர்  ராஜீவ் காயதி மானவ் சேவா விருது வழங்கியதையடுத்து, வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.   அதில், ‘குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தைகளை பிச்சையெடுத்தலில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளித்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக  Terre Des Homes Core Trust என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் தங்களின் பணியினை அங்கீகரித்து, இந்திய குடியரசுத் தலைவரால், ராஜீவ் காந்தி மானவ் சேவா விருது வழங்கப்பட்டதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதினை பெற்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் வருங்காலங்களிலும் தன்னார்வ சேவையில் சிறப்பாக சேவையாற்றி, பல விருதுகளை பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Label