OUR CLIENTS
பாமக கோட்டையை மெல்ல தகர்த்தார் மாநில தலைவர் மணி சேலம், தருமபுரி மாவட்டத்தில் ஆளில்லாத பரிதாபம் தொடருது!
பாமக கோட்டையை மெல்ல தகர்த்தார் மாநில தலைவர் மணி சேலம், தருமபுரி மாவட்டத்தில் ஆளில்லாத பரிதாபம் தொடருது! Posted on 16-Nov-2017 பாமக கோட்டையை மெல்ல தகர்த்தார் மாநில தலைவர் மணி சேலம், தருமபுரி மாவட்டத்தில் ஆளில்லாத பரிதாபம் தொடருது!

சேலம், நவ.16
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக சூறாவளிகள் உள்ளன.

சமுதாய அடிப்படையில் உருவான வன்னியர் சங்கம், தமிழக ஆட்சி கட்டிலில் அமர பாட்டாளி மக்கள் கட்சியாக உருமாறி தமிழகத்தின் திராவிட கட்சிகளுகளுக்கு இணையான வளர்ச்சியை கண்டது. நடந்து முடிந்த தேர்தல்களில் கூட்டணி குழப்பங்களினால் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது. அதன் மாநில இளைஞர் சங்க தலைவராக உள்ள அன்புமணியை தமிழக முதல்வராக்கிவிட வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். பாமகவின் மாநில தலைவர் ஜி.கே.மணியோ பாமகவில் பலரையும் ஓரங்கட்டி வெளியேற்றி வருகிறார். இதனால் பாமகவின் கோட்டையாக கருதப்படும் சேலம், தருமபுரி மாவட்டங்கள் ஓட்டையாகி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற குமுறல் பரவலாகவே உள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது தனக்கு பாதுகாப்பான வெற்றி பெறக்கூடிய ஒரு தொகுதியை தேடிய மாநில தலைவர் ஜி.கே.மணி ஏற்கனவே தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக அன்புமணி வெற்றி பெற்றதை மையப்படுத்தி அதனையே பயன்படுத்தி வென்றுவிடலாம் என கணக்கு போட்டு தருமபுரி மாவட்டத்தில் குறிப்பாக தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளை எதிர்நோக்கி காய் நகர்த்த, அதற்கு முட்டுகட்டைபோட்ட மாநில துணை பொதுச்செயலாளர் சரவணனை காலி பண்ண முதல் கட்டமாக அமைச்சர் அன்பழகனின் தொகுதிக்கு பாமக வேட்பாளராக்கி தோல்வியடையச் செய்தார். 

பின்னர் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் சரிபட்டு வராது என ஓமலூர் சட்டமன்ற தொகுதியை அடைய திட்டமிட அதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் தமிழரசு விடாப்பிடியாக இருக்க தேர்தலில் தோல்வியடைந்த தமிழரசை கட்சிக்கு எதிராக அணி திரட்டுகிறார் என்பதுபோல் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து அவரின் பதவியையும் காலி செய்தார். இவருடன் சேர்த்து வாழப்பாடியைச் சேர்ந்த பாமக மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகமும் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இதேபோல் இவரின் வெற்றி தொகுதி தேடும் படலத்தில் மாவட்ட தலைவர் சின்னதுரையின் பதவியும் பறிக்கப்பட்டது. கடைசியில் மேட்டூரை விட்டால் கதியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டவர், மேட்டூரில் எம்எல்ஏ சீட்டு கனவிருந்த சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் மினரல் சதாசிவம், வன்னியர் சங்க வழக்குரைஞர் துரைராஜ் ஆகியோரை டம்மியாக்கிவிட்டு தனக்கு மேட்டூர் தொகுதியென பிக்ஸ் பண்ணினார். 

ஆனாலும் மீண்டும் தோல்வி. தோல்விக்குப்பின் தனக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தரவில்லை என்ற திரைமறைவு கோபத்துடன் ராமகிருஷ்ணனை பழிவாங்க காத்திருந்த ஜி.கே.மணி, கடந்த 10 நாட்களுக்கு முன் திருமண நிகழ்வில் பதவி பறிக்கப்பட்ட தமிழரசுடன் பேசியதாக கூறி, கட்சிப்பதவியை தலைமையிடம் மன்றாடி பறித்துவிட்டாராம். இப்படி கட்சிக்கு துரோகிகள் என்ற தொணியில் பறிக்கப்பட்ட பதவிகளை தனது விசுவாசிகள் பலருக்கும் கொடுத்து தனது ஆதரவு அணியை அதிகப்படுத்தி கொண்டார் என்றும் குறிப்பாக மேற்கு மாவட்ட செயலாளராக ராமகிருஷ்ணனுக்கு பதில் நங்கவள்ளி வடக்கு ஒன்றிய பாமக செயலாளராக பணியாற்றிய ராஜசேகரை நியமித்துள்ளதை பலரும் மறைமுகமாக எதிர்க்கின்றனர். 

ராஜசேகர் பதவி கிடைத்தபின் அண்மையில் ராமன் நகர், ராஜதுரை திருமண மண்டபத்தில் பொதுக்குழுவை கூட்டினார். இதில் மூத்த கட்சிக்காரர்கள் 80 சதவீதம் பேர் ஆப்சென்ட், புதிதாக முகம் தெரியாத கட்சிக்காரர்களே சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். இப்படி கட்சிக்காரர்கள் வராததற்கு மேற்கு மாவட்டª சயலாளர் பதவி மினரல் சதாசிவத்திற்கோ, மேச்சேரி முன்னாள் சேர்மன் குமாருக்கோ, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாவுக்கோ, முன்னாள் ஒன்றிய செயலாளர்களான ரகுபதிக்கோ, கு.ப.கோவிந்தனுக்கோ கொடுத்திருக்கலாம் என்ற காரணமும், ராமகிருஷ்ணன் நீக்கம், சேலம் மேற்கு மாவட்ட பாமகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் சேலம், தருமபுரி பாமகவினர். 

Label