OUR CLIENTS
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு வயது வரம்பு குறைக்க மத்திய அரசு பரிசீலனை
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு வயது வரம்பு குறைக்க மத்திய அரசு பரிசீலனை Posted on 17-Nov-2017 ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு வயது வரம்பு குறைக்க மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி, நவ.17
ஐ.ஏ.எஸ். போன்ற சிவில்சர்வீஸ் தேர்வுகளை எழுத தற்போது உள்ள அதிகபட்ச வயது வரம்பை குறைக்கலாம் என்று பஸ்வான் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது பற்றி பரிசீலித்து வருவதாக மத்திய அரசு கூறிஉள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ்  தேர்வுக்கான வயது வரம்பு, . தற்போது பொதுப்பிரிவினர் 32 வயது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  35 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும்  பழங்குடியினத்தவர்கள் 37 வயது வரை எழுதலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வு முறையில் சீர்திருத்தங்களைச் செய்வது  தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க  ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி  பி.எஸ். பாஸ்வான் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு கடந்த மார்ச் மாதம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பை குறைக்கும்படி பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.  இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்த அறிக்கை மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

இது பற்றி தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  பிடிஐ செய்தியாளர் ஒருவர் விளக்கம் கேட்டிருந்தார். பணியாளர் நலத்துறை இதற்கு அளித்த பதிலில், பஸ்வான் கமிட்டி அறிக்கை மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம்  பரிந்துரைகள் இணைப்புகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை அரசின் பரிசீலனையில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பஸ்வான் கமிட்டி அறிக்கை, சிவில்சர்வீஸ் தேர்வுமுறையில் மாற்றம் மற்றும் வயது வரம்பு  மத்திய பணியாளர்தேர்வாணையத்தின் பரிசீலனையில் உள்ளது என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர்ஜிதேந்திராசிங் ஏற்கனவே பார்லி. யில் ஒரு கேள்விக்கு  பதில் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில்   மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் இது வரை கேட்கப்பட்ட கேள்விகளில் தவறுகள் மற்றும் குறைபாடுகள் பற்றி ஏழு நாட்களில் தெரிவிக்கும்படி  தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வாணையம் அவகாசம் அளித்துள்ளது.

Label