OUR CLIENTS
ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மிகச்சிறப்பான ஒப்பந்தம்! : விமானப் படை தளபதி
ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மிகச்சிறப்பான ஒப்பந்தம்! : விமானப் படை தளபதி Posted on 17-Nov-2017 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க  மிகச்சிறப்பான ஒப்பந்தம்!  : விமானப் படை தளபதி

புதுடெல்லி, நவ.17
ஃபிரான்சில் இருந்து ரஃபேல்   போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில், மிகச்சிறப்பான ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதாக, விமானப் படை தளபதி பிஎஸ் தனோவா   கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஃபிரான்சின் டசால்ட் (Dassault) ஏவியேஷன் மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் இடையேயான ஜாயின்ட் வெஞ்சர் ஆக ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டதாக காங்கிரஸ் கூறியிருந்தது. ஆனால், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் டசால்ட் நிறுவனத்துடன் ஜாயின்ட் வெஞ்சர் மேற்கொள்வதற்கு வசதியாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

இதேபோல, ரஃபேல் போர் விமானங்களை மும்மடங்கு அதிக விலைக்கு வாங்க ஒப்பந்தம்போடப்பட்டிருப்பதாகவும் அக்கட்சி புகார் கூறியிருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும், பாஜகவும் ஏற்கெனவே மறுத்துள்ளன. இந்நிலையில், ஃபிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குதற்கான ஒப்பந்தம் மிகச்சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய விமானப் படை தளபதி பிஎஸ் தனோவா கூறியுள்ளார். ரஃபேல் விமானங்களுக்கு அதிக விலை வைக்கப்படவில்லை என்றும், அரசு மிக நல்ல ஒப்பந்தத்தையே செய்திருப்பதாகவும் பிஎஸ் தனோவா தெரிவித்துள்ளார்.

Label