OUR CLIENTS
ரபேல் விமானக் கொள்முதல் மோடி மீது ராகுல் மீண்டும் புகார்
ரபேல் விமானக் கொள்முதல் மோடி மீது ராகுல் மீண்டும் புகார் Posted on 17-Nov-2017 ரபேல் விமானக் கொள்முதல் மோடி மீது ராகுல் மீண்டும் புகார்

புதுடெல்லி, நவ.17
இந்திய அரசு ரபேல் விமானக் கொள்முதல் விபரங்களை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு வர்த்தகருக்காக மாற்றி உள்ளது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை குற்றம்சாட்டினார்.

முதலில் வியாழனன்று காலை டுவிட்டரில் ரபேல் விமானக் கொள்முதல் குறித்து ராகுல் குற்றம் சாட்டினார்.  விமான உற்பத்தியில் கொஞ்சம்கூட அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரபேல் விமான உற்பத்திக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் தர முடியுமா?   மேக் இன் இந்தியா திட்டமும் சுயச் சார்வை அடிப்படையாகக் கொண்டது குறிப்பிடத்தகுந்தது என்றார்.

கடந்த செவ்வாயன்று ரிலையன்று நிறுவனத்துக்கு எனத் தயாரித்தது போல ரபேல் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் அமைந்துள்ளது என்றார் ராகுல்.  ஆனால் பாஜக ராகுல் காந்தியின் புகார்களை நிராகரித்தது. முதலில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.  பிரான்ஸ் உயர் அதிகாரி ஒருவர் கற்பனைகள் உண்மைகளாக வெளியிடப்படுகின்றன என்று கூறி உள்ளார்.  ராகுல் கருத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கடுமையாக குறை கூறியது. ராகுல் தான் கூறிய கருத்துகளை திருத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு மோடி சென்றபோது 118 ரபேல் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் 2016ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.  2016ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி 870 கோடி டாலருக்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. சரியாக 10 நாள் கழித்து 2016 அக்டோபர் 3ம் தேதி பிரான்ஸ் நாட்டின் போர் விமான உற்பத்தி நிறுவனமான டஸ்ஸால்ட் கம்பெனியில் பங்குதாரராக ரிலையன்ஸ் பென்ஸ் நிறுவனம் சேர்ந்தது.  இந்த ஒப்பந்தம் காரணமாக ரூ.30000 கோடிக்கான வர்த்தகம் ரிலையன்ஸிற்கு கிடைத்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இதனை ரிலையன்ஸ் மறுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையகத்தில் செய்தியாளர்கள் ராகுலை சந்தித்தனர். அவர்களிடம் ஒரு கருத்தை ராகுல் தெரிவித்தார்.  நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். நான் சந்தோஷமாக பதில் கூறுகிறேன். இன்று நான் உங்களிடம்  கேட்கிறேன். நீங்கள் ஏன் இந்திய பிரதமரிடம் கேள்வி கேட்பதில்லை. பிரதமரிடம் ரபேல் விமான ஒப்பந்தம் பற்றிக் கேளுங்கள். அமித் ஷாவின் கம்பெனி பற்றிக் கேளுங்கள்.  ஒரு வர்த்தகருக்கு உதவுவதற்காக ரபேல் கொள்முதல் ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றிக் கேளுங்கள் என்று ராகுல் கூறினார்.

Label