OUR CLIENTS
காலில் அடிபட்ட மாணவனுக்கு நாய்க்கடிக்கான ஊசி : அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கு
காலில் அடிபட்ட மாணவனுக்கு நாய்க்கடிக்கான ஊசி : அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கு Posted on 17-Nov-2017 காலில் அடிபட்ட மாணவனுக்கு நாய்க்கடிக்கான ஊசி   : அரசு மருத்துவமனையின்  அலட்சிய போக்கு

சென்னை, நவ.17
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்ட மாணவனுக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் நாய்க்கடிக்கான ஊசி போடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் நரேஷ் அண்மையில் கீழே விழுந்ததில் வலது கால் கட்டை விரலில் நகம் லேசாக பெயர்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.

மறுநாள் காலை நரேஷ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் ஒருவர் நாய்க்கடிக்கான ஊசியை சீட்டில் எழுதிக் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட இடைவெளியில் ஊசி போட வருமாறு சில தேதிகளையும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார். அதன்படி ஊசி போட்டுக் கொண்ட நரேஷ்-க்கு மயக்கம் வருவது போல் உணர்ந்துள்ளார். மருத்துவர் அறிவுரைப்படி அடுத்த முறை ஊசி போட வந்த போது, “நாய் கடித்ததே? தற்போது எப்படி உள்ளது” என சீட்டைப் பார்த்து வேறு ஒரு மருத்துவர் கேட்ட பின்பே தமக்கு தவறான ஊசி போடப்பட்டதை அந்த மாணவன் தெரிந்துகொண்டுள்ளார்.

Label