OUR CLIENTS
ஜெயலலிதாவை விமர்சிக்க திவாகரனுக்கு எந்த தகுதியும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்
ஜெயலலிதாவை விமர்சிக்க திவாகரனுக்கு எந்த தகுதியும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் காட்டம் Posted on 21-Nov-2017 ஜெயலலிதாவை விமர்சிக்க திவாகரனுக்கு எந்த தகுதியும் இல்லை  : அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சென்னை,  நவ.21
ஜெயலலிதாவை விமர்சிக்க திவாகரனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஜெயலலிதா மீது குறைகூறி வரும் திவாகரனும், தினகரனும் சந்தர்ப்பவாதங்களின் ஒட்டுமொத்த உருவங்கள். இவர்கள் தமிழகத்தையே சூறையாடி வளைத்துப்போட்டு வைத்துள்ளார்கள்.  உப்பிட்டவர்களேயே உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போன்ற நடைமுறைகளைத்தான் கடந்த சில நாட்களாக  அவர்களிடம் நாம் பார்த்து வருகிறோம். ஜெயலலிதாவை விமர்சிக்க திவாகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. ஜெயலலிதாவை குற்றவாளி என டிடிவி தினகரன் கூறியிருப்பது எவ்வளவு நெஞ்சழுத்தம் என்பதையே காட்டுகிறது. அவர்களை வரலாறு மன்னிக்காது என்று ஆவேசமாகக் கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

Label